புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே புயல் சீரமைப்பு பணிகள் நடைபெறாததால் மறியல்

DIN

கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூர் கிராம மக்கள், புயல் சீரமைப்பு பணிகள் நடைபெறாததால் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
கந்தர்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூர் கிராமத்தில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வீடுகள், கூரை வீடுகள் ஆகியவை வெள்ளிக்கிழமை கோரத்தாண்டவமாடிய கஜா புயல் சீற்றத்தால் முற்றிலும் சேதமடைந்தன.  மேலும், மரங்கள் ஆங்காங்கே சாலைகளில் முறிந்து விழுந்தும், மின் கம்பங்கள் சாய்ந்தும், உணவு, குடிநீர், போக்குவரத்து இன்றி அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதிகாரிகள் யாரும் வந்து மீட்பு பணிகள் ஏதும்  மேற்கொள்ளாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தஞ்சை - புதுக்கோட்டை  சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியர் இ. ஆரமுததேவசேனா, காவல் ஆய்வாளர் மன்னர் மன்னன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக மீட்புப் பணியை மேற்கொள்வதாகக் கூறினர். இதையடுத்து அவர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT