புதுக்கோட்டை

மழையால் சீரமைப்புப் பணிகள் சுணக்கம்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.
கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பணியாளர்கள் புதுக்கோட்டையில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கஜாவைத் தொடர்ந்து இன்னும் சில புயல்கள் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதன்படி செவ்வாய்க்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது.  பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீர் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த மழைநீடித்தது. இதனால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதே மழைச் சூழல் தொடர்ந்தால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புதல் இன்னும் சில நாட்கள் ஆகலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

போலி பத்திரம் மூலம் ரூ.10 லட்சம் கடன்: வங்கி மேலாளா்கள் உள்பட 5 போ் கைது

சந்தோஷி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

திருப்பாலைத்துறை வீரமகா காளியம்மன் கோயிலில் பால்குட விழா

SCROLL FOR NEXT