புதுக்கோட்டை

பள்ளி மாணவர்களுக்கான  திறனாய்வுத் தேர்வு

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வை 2701 பேர் எழுதினர்.
ஆண்டுதோறும்  அரசு,  அரசு உதவிபெறும்  பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நடைபெறும் திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.1000 நான்காண்டுகளுக்கு அரசால் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
இதில் நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வில்
புதுக்கோட்டை மாவட்டத்தில், ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி,  ஆலங்குடி அரசு ஆண்கள், மகளிர் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி, மணமேல்குடி,கீரனூர், கந்தர்வகோட்டை  உள்ளிட்ட 12 அரசுப் பள்ளிகளில் நடைபெற்றது.  இதில், மாவட்டத்தின் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் 2701 பேர் தேர்வு எழுதினர்.
புதுக்கோட்டை ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளி, பிரகம்பதம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  நடைபெற்ற தேர்வுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். வனஜா ஆய்வு மேற்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT