புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே கிணற்றில் இறந்து கிடந்த இளைஞரின் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.
கீரமங்கலம் அருகேயுள்ள குளமங்கலம் தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கையா மகன் அன்பரசு (25). பொறியியல் பட்டதாரியான இவர், சனிக்கிழமை இரவு வீட்டில் இருந்து வெளியே சென்று வீடு திரும்பவில்லையாம். இதனால் அவரது உறவினர்கள் தேடிப் பார்த்தபோது, அப்பகுதியில் உள்ள சுமார் 80 அடி ஆழ நீரில்லாத கிணற்றில் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து சென்ற கீரமங்கலம் போலீஸார், தீயணைப்பு நிலையத்தினர் உதவியோடு சடலத்தை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.