புதுக்கோட்டை

தேசியக் கல்விக் கொள்கை வரைவு: கந்தர்வகோட்டையில் கருத்தரங்கம்

DIN

 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கந்தர்வகோட்டையில் புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு  தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரத் துணைத் தலைவர் பா.ரமேஷ்குமார் தலைமை வகித்தார். வட்டாரச்  செயலர் ரெ.தவச்செல்வன் வரவேற்றார். புகைப்படக் கண்காட்சியை ஆ.மணிகண்டன், கோ. சக்திவேல், எம். சிவா திறந்துவைத்தனர்.  கருத்தரங்கில் கவிஞர்கள் நா.முத்துநிலவன், ராசி.பன்னீர்செல்வம்  பங்கேற்று,  புதிய  தேசியக் கல்விக்கொள்கை குறித்து  பேசினர். கருத்தரங்கில் மு.  முத்துக்குமார், கவிஞர்கள்  ஸ்டாலின் சரவணன், அண்டனூர் சுரா, சு.மதியழகன், கே.பாக்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் கருத்தரங்குக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT