புதுக்கோட்டை

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில்  ஆவணி 2-ஆம் ஞாயிறு வழிபாடு

கந்தர்வகோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி ஞாயிறு 2 ஆம் வார மண்டகப் படி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

DIN

கந்தர்வகோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி ஞாயிறு 2 ஆம் வார மண்டகப் படி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் சுற்று வட்டாரப் பகுதியில் பிரசித்தி பெற்றது. நிகழாண்டு ஆவணி ஞாயிறு திருவிழாவின் இரண்டாம் ஞாயிறு திருவிழா இரண்டாம்வார மண்டகப்படிதாரர்களால் நடைபெற்றது. அதிகாலை முதலே  பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்துவந்தனர். 
அம்மனுக்கு பால், பன்னீர், தேன் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது. மதியம் கஞ்சி வார்த்தல் நடைபெற்றது. மாலை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பெண்கள் முளைப்பாரி, பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர். இரண்டாம்வார மண்டகபடியை முன்னிட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சி தந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT