புதுக்கோட்டை

புதுக்குடியில் கடலோர பாதுகாப்பு குழும போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பிரிவு மீமிசல் கடற்கரை  காவல்நிலைய  எல்லைக்கு உள்பட்ட 

DIN

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பிரிவு மீமிசல் கடற்கரை  காவல்நிலைய  எல்லைக்கு உள்பட்ட புதுக்குடி மீனவ கிராம அரசுப் பள்ளியில், கடலோர பாதுகாப்பு குழும 25-வது ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு செவ்வாய்கிழமை  பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
கடலோர பாதுகாப்பு குழும  வெள்ளி விழா ஜூன் 29 முதல்  ஜூலை 4 -ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. 
இதையொட்டி புதுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில்  கடலோர பாதுகாப்பு, மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் கடல் வளம் பாதுகாப்பில்  கடலோர பாதுகாப்பு குழுமத்தின் பங்கு  என்ற தலைப்பின் கீழ் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில்  திருப்புனவாசல்  கடற்கரை காவல்நிலைய உதவி ஆய்வாளர் பா. ரகுபதி, புதுக்குடி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிஹரன் மற்றும் மீனவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவுப் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

SCROLL FOR NEXT