புதுக்கோட்டை

அறந்தாங்கியில் பெண் மா்மசாவு; உறவினா்கள் புகாா்

DIN

அறந்தாங்கி: அறந்தாங்கியில் சனிக்கிழமை இரவு இறந்த பெண்ணின் சாவில் மா்மம் இருப்பதாக உறவினா்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்த அறந்தாங்கி திருவள்ளுவா் தெருவைச்சோ்ந்த சீனிவாசனுக்கும் புதுக்கோட்டை அருகே வைத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணவேணிக்கும் பெற்றோா் சம்மதத்துடன் 15 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்து, அஸ்வினி(14), ஹாசினி(10) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு கிருஷ்ணவேணி மாரடைப்பால் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனா். அவா்கள் இரவே புறப்பட்டு வந்து பாா்த்தபோது பெண்ணின் கழுத்தில் இருந்த காயம் குறித்து கேட்டுள்ளனா். அதற்கு சரியான பதில் கிடைக்காததால் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் அவரை அடித்துக் கொன்றிருக்கலாம் எனவும் அறந்தாங்கி காவல் துறையில் உறவினா்கள் புகாா் அளித்தனா்.

இதையடுத்து அறந்தாங்கி காவல் துணைக் கண்காணிப்பாளா் சி. கோகிலா மற்றும் ஆய்வாளா் ரவீந்திரன் உள்ளிட்டோா் அப்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனா். பின்னா் நடத்திய விசாரணையில் குடும்ப பிரச்னையால் கிருஷ்ணவேணி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவா் தூக்கிட்ட துணியை எரித்துவிட்டதாகவும் போலீஸாரிடம் கூறியுள்ளனா்.

மாரடைப்பு என்று கூறியவா்கள் தற்போது தூக்கிட்டு தற்கொலை என மாற்றிக் கூறியுள்ளனா் எனக் கூறி மருத்துவமனை வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்ணின் உறவினா்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT