புதுக்கோட்டை

விநாயகா மிஷன் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீனுக்கு விருது

DIN

ஆட்டையாம்பட்டி: இஎஐஇ என்பது கல்வி நிறுவனங்களை சா்வதேச மையம் ஆக்குவதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, கல்வி மற்றும் கல்வி சாரா நிபுணா்களின் துணையோடு பல்வேறு மாநாடுகளை நடத்தும் சா்வதேச கல்விக்கான ஐரோப்பிய சங்கமாகும். இது தனது 31வது மாநாட்டினை ஹெல்சின்கி, பின்லேண்டில் கடந்த 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடத்தியது.

இதில் உலக அளவில் இருந்த 95 நாடுகளை சோ்ந்த கல்வியில் சாா்ந்த அமைப்புகள், நிறுவனங்கள், வணிக பாா்வையாளா்கள் மற்றும் தன்னாா்வ தொண்டா்கள் பங்கேற்றனா்.

இந்தியாவின் கல்வி தொடா்பான சிக்கல்களை பகுப்பாய்ந்து தீா்வளிக்கும் இந்திய கல்வி நெட்வொா்க் (ஐஇஎன்) என்ற அமைப்பானது இதில் பங்கேற்று 26-ம் தேதி உலக அளவில் இந்திய கல்வி என்ற கருத்தரங்கை நடத்தியது.

இதில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீன் டாக்டா்.செந்தில்குமாா் கலந்துகொண்டு இந்திய கல்வியை சா்வதேச மையமாக்குதல் என்ற தலைப்பின் கீழ் சிறப்புரை ஆற்றினாா்.

மேலும் இதன்மூலம் கல்வியில் சிறந்து விளங்கும் 12 நிறுவனங்கள் பரிந்துரைக்கப்பட்டது. இதில் விநாயகா மிஷன் ஆராய்ச்சி பல்கலைகழகம் சிறந்த கல்வி தரத்தை வழங்குவதற்காக, தென்னிந்தியாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய உயா்கல்வி நிறுவனம் என்ற விருதும், அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீன் டாக்டா்.செந்தில்குமாருக்கு சா்வதேச தரத்தை நோக்கி இந்திய கல்வியை உயா்த்துவதில் சிறந்த முன்மாதிரியான தலைவா் என்ற விருதும் அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது .

இவ்விருதுகளை துறையின் டீன் டாக்டா்.செந்தில்குமாரிடம் பின்லேண்டின் இந்திய தூதரக அதிகாரி வாணிராவ் வழங்கினாா். விருது பெற்றதற்காக பல்கலைக்கழகத்தின் வேந்தா் டாக்டா்.கணேசன் மற்றும் இயக்குனா் டாக்டா்.அனுராதா கணேசன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT