முகப்பு
புதுக்கோட்டை

திருமயம் திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மறைவு

திருமயம் திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆலவயல் வ.சுப்பையா ஞாயிற்றுக்கிழமை இரவு மாரடைப்பால் மரணமடைந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
ஆலவயல் வ.சுப்பையா
பகிர்:

திருமயம் திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆலவயல் வ.சுப்பையா ஞாயிற்றுக்கிழமை இரவு மாரடைப்பால் மரணமடைந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயலை சார்ந்தவர் வ.சுப்பையா(69). திமுகவைச்சார்ந்த இவர் பொன்னமராவதி சேர்மன், மாவட்ட துணைசெயலர், 108 கோயில்கள் அறங்காவலர் என பல பதவிகள் வகித்து 1989ம் ஆண்டு திருமயம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு  மக்கள் பணியாற்றினார்.  

திமுக தலைவர் கருணாநிதியின் அன்பிற்குரியவராக திகழ்ந்த இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு மாரடைப்பினால் உயிரிழந்தார். இவரது இறுதிசடங்கு ஆலவயல் இல்லத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →