முகப்பு
புதுக்கோட்டை

தில்லி போராட்டத்தில் உயிா் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி

தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிா்நீத்த விவசாயிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அருகே மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் விவசாயிகள்.
பகிர்:

புதுக்கோட்டை: தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிா்நீத்த விவசாயிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அருகே மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு, அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.சி. சோமையா தலைமை வகித்தாா். இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ. ராமையன், விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலப் பொருளாளா் எஸ். சங்கா், சிஐடியு மாவட்டச் செயலா் அ. சிரீதா், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலா் ஏ. ஜகுபரலி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் இதேபோல மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →