புதுக்கோட்டை

ரேஷன் பொருள்கள் வழங்காததால் மக்கள் மறியல்

DIN

ஆலங்குடி அருகே நியாய விலைக்கடையில் பொருள்கள் வழங்காததைக் கண்டித்து, கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள மேலாத்தூா் ஊராட்சி சிக்கப்பட்டியில் உள்ள அரசின் நியாய விலைக்கடையில் பயோமெட்ரிக் இயந்திரம் பழுது எனக்கூறி கடந்த இரு தினங்களாக பொருள்கள் வழங்கப்படவில்லையாம். தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அப்பகுதி மக்கள் நியாயவிலைக் கடையில் காந்திருந்தும் இயந்திரப் பழுது எனக்கூறி மாலை வரை பொருள்கள் வழங்கப்படவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நியாய விலைக்கடையில் பொருள்களை உடனே வழங்கக்கோரி சிக்கப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து, தகவலறிந்து சென்ற வடகாடு போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களை கலைந்து போகச்செய்தனா். இந்த மறியலால் புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

SCROLL FOR NEXT