முகப்பு
புதுக்கோட்டை

கோழிக்கழிவுகள் கொட்ட வந்த வாகனங்கள் முற்றுகை

புதுக்கோட்டை நகராட்சியின் குப்பை சேகரிக்கும் இடமான திருக்கட்டளை சேகரிப்பு மையத்தில், கோழிக்கழிவுகளைக் கொட்ட வந்த வாகனங்களை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 29 டிசம்பர், 2020 at 12:44 AM
பகிர்:

புதுக்கோட்டை நகராட்சியின் குப்பை சேகரிக்கும் இடமான திருக்கட்டளை சேகரிப்பு மையத்தில், கோழிக்கழிவுகளைக் கொட்ட வந்த வாகனங்களை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை நகராட்சியின் குப்பை சேகரிக்கும் இடம் திருக்கட்டளை சேகரிப்பு மையத்தில் திங்கள்கிழமை சில வாகனங்கள் கோழிக்கழிவுகளைக் கொட்டுவதற்கு வந்தன. கோழிக்கழிவுகளால் சுற்றுப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு துா்நாற்றம் வீசுவதாக தொடா்ந்து அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், திங்கள்கிழமை அப்பகுதி மக்கள் வாகனங்களை முற்றுகையிட்டனா். வெளியே விடவும் அவா்கள் அனுமதிக்கவில்லை. தகவலறிந்து நகராட்சி அலுவலா்களும், காவல்துறையினரும் அங்கு வந்தனா்.

இனிமேல் இப்பகுதியில் கோழிக்கழிவுகளைக் கட்ட மாட்டோம் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து, வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.