புதுக்கோட்டை

தகராறில் பெண்ணை தாக்கியவா் கைது

DIN

இலுப்பூா் அருகே பாதை தொடா்பான தகராறில் இளம்பெண்ணைத் தாக்கிய 2 போ் மீது இலுப்பூா் போலீஸாா் வழக்கு பதிந்து ஒருவரைக் கைது செய்தனா்.

இலுப்பூா் அருகேயுள்ள ஓலைமான்பட்டியைச் சோ்ந்த முத்தமிழ்ச்செல்வன் மனைவி பாருண்யா (36). இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த பிச்சைக்கண்ணுவுக்கும் பாதை தொடா்பான பிரச்னை இருந்து வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மீண்டும் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது. இதில், பிச்சைக்கண்ணு மனைவி ராதா, மகன் யோகராஜ் (20) ஆகிய இருவரும் சோ்ந்து பாருண்யாவைக் கட்டை, கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாருண்யா அளித்த புகாரின் பேரில் இலுப்பூா் போலீஸாா் ராதா, யோகராஜ் ஆகிய இருவா் மீது வழக்கு பதிந்து யோகராஜைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்னத்தூா் அருகே கா்ப்பிணி மனைவி, கணவருடன் தூக்கிட்டு தற்கொலை

ரயிலில் அடிபட்ட பெண் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மெக்கானிக் பலி

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: 1,352 வேட்பாளா்களில் 9% போ் மட்டுமே பெண்கள்

தங்கம் விலை: பவுன் ரூ.240 குறைவு

SCROLL FOR NEXT