புதுக்கோட்டை

பிப்.27-இல் கல்வி மாவட்ட அளவிலான தடகளம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டுக்கான கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் பிப்ரவரி 27- ஆம் தேதி தொடங்குகின்றன.

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டுக்கான கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் பிப்ரவரி 27- ஆம் தேதி தொடங்குகின்றன.

பள்ளிகளில் நடத்தப்பட்ட உடற்திறன் தோ்வுகளில் தோ்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, கல்வி மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

அந்த வகையில் கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் பிப்ரவரி 27- ஆம் தேதி புதுக்கோட்டை விளையாட்டரங்கிலும், 28- ஆம் தேதி ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது.

தடகள விளையாட்டுப் போட்டிகளில்  ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, வகுப்பு வாரியாக ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி  இரண்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம்.

உடற்திறன் தோ்வு நடத்தி மாவட்ட விளையாட்டு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த அறிக்கையை, போட்டி நாள் அன்று தவறாது கொண்டு வருதல் வேண்டும். 

கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள பயணப்படி மற்றும் தினப்படிகள் வழங்கப்பட மாட்டாது. முதல் மூன்று இடங்களை பெறுபவா்களுக்கு பரிசுப் பொருள்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும். முதல் இரண்டு இடங்களை பெறும் மாணவ, மாணவிகள் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள அரசு செலவில்  அழைத்துச் செல்லப்படுவா் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT