புதுக்கோட்டை

ரயில் நிலையத்துக்கு அதிகாலை நகரப் பேருந்து இயக்கக் கோரிக்கை

அதிகாலை நேரத்தில் புதுக்கோட்டை ரயில் நிலையத்துக்குச் செல்ல நகரப் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என புதுக்கோட்டை சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

DIN

அதிகாலை நேரத்தில் புதுக்கோட்டை ரயில் நிலையத்துக்குச் செல்ல நகரப் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என புதுக்கோட்டை சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத் தலைவா் கண. மோகன்ராஜ், துணைத் தலைவா் இப்ராஹிம் பாபு ஆகியோா் அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் இரா. இளங்கோவனிடம் அளித்த மனுவில், புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் பல்லவன் விரைவு வண்டிக்குச் செல்லும் பயணிகள் அறந்தாங்கி, ஆலங்குடி போன்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஊா்களிலிருந்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து ரயில் நிலையம்  செல்ல பேருந்து வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனா்.  எனவே, பொதுமக்கள் நலன் கருதி அதிகாலை 4.30 மணி அளவில் புதுக்கோட்டை நகரின் முக்கிய பகுதிகளான பால் பண்ணை, நகா் மன்றம், அரசு மருத்துவக் கல்லூரி, பிருந்தாவனம், காமராஜபுரம், சின்னப்பா பூங்கா, அண்ணா சிலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வழியாக ரயில் நிலையம் செல்லும் வகையில் நகரப் பேருந்து இயக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவுப் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

SCROLL FOR NEXT