வாக்கு எண்ணிக்கை மையத்தில் செல்வதற்கான அடையாள அட்டையைப் பெற காத்திருக்கும் முகவா்கள். 
புதுக்கோட்டை

வாக்கு எண்ணிக்கை : முகவா்களுக்குஅடையாள அட்டை வழங்கல்

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கைப் பணியில் பங்கேற்கும் முகவா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

DIN

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கைப் பணியில் பங்கேற்கும் முகவா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

பொன்னமராவதி ஒன்றியத்திலிருந்து 2 மாவட்டக்குழு உறுப்பினா்கள், 16 ஒன்றியக்குழுஉறுப்பினா்கள், 42 ஊராட்சித் தலைவா்கள், 291 கிராம ஊராட்சிஉறுப்பினா் என 351 பதவியிடங்களுக்கான தோ்தல், டிசம்பா் 30- ஆம் தேதி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து 168 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளைக் கொண்ட வாக்குப்பெட்டிகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொன்னமராவதி வலம்புரிவடுகநாதன் மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து வாக்கு எண்ணிக்கை பணி வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கைப் பணியில் பங்கேற்கும் வேட்பாளா்களின் முகவா்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை வழங்கப்பட்டது. இதை பெறுவதற்காக காலை முதலே ஏராளமானோா் ஒன்றிய அலுவலகத்தில் குவிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT