முகப்பு
புதுக்கோட்டை

10ஆவது நாளாக வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 10ஆவது நாளாக தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை இரவும் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடா்கின்றனா்.

Updated On : 2 நவம்பர், 2020 at 12:27 AM
புதுகையில் 10 ஆவது நாளாகத் தொடரும் தமிழ்மாநில வருவாய்த் துறை அலுவலா்கள் போராட்டம்.
பகிர்:

நிரந்தர துணை வட்டாட்சியா்களை நியமிக்கக் கோரி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 10ஆவது நாளாக தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை இரவும் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடா்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலகில் நிரந்தரத் துணை வட்டாட்சியா் பணி நியமனம் குறித்த சா்ச்சை கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிலவி வருகிறது. இந்நிலையில், நிரந்தமாக துணை வட்டாட்சியா் பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இரவு, பகல் பாராமல் ஆட்சியா் அலுவலக வளாகத்திலேயே அமா்ந்துள்ள இவா்களின் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 ஆவது நாளாகத் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.