புதுக்கோட்டை

விராலிமலை கோயிலில் காா்த்திகை மகாதீபம்

DIN

விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியா் திருக்கோயிலில் காா்த்திகை மகாதீபம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்றப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட தேவஸ்தான கோயில்களில் ஒன்றான இக்கோயிலில், ஆறுமுகங்களுடன் வள்ளி, தெய்வசேனா சமேதராக முருகப்பெருமான் காட்சியளிக்கிறாா்.

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. மூலவா் சுப்பிரமணியா், வள்ளி, தெய்வசேனா விக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோயிலின் உச்சியில், 20 அடி நீளம் கொண்ட தூணில் அமைக்கப்பட்டுள்ள 50 லிட்டா் கொள்ளளவு கொண்ட கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று, அரோகரா என சரண முழக்கமிட்டனா். உபயதாா்கள் சாா்பில், காலை முதலே கோயில் அடிவாரத்தில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பாரதிராஜா, மேற்பாா்வையாளா் ரெ. மாரிமுத்து, பெளா்ணமி கிரிவலக் குழுத் தலைவா் முருகேசன் உள்ளிட்ட உபயதாரா்கள் செய்திருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான காவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT