முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை முருகன் கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா

கந்தா்வகோட்டை பகுதி முருகன் கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

கந்தா்வகோட்டை பகுதி முருகன் கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை அருள்மிகு ஆபத்சகாயேசுவரா் கோயிலில் தனி சன்னதி கொண்டுள்ள சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அலங்காரத்துக்குப் பின்னா் தீபாராதனை நடத்தப்பட்டது.

இதுபோல, தச்சங்குறிச்சி குகைமுருகன் கோயிலிலும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்ட பின்னா், சந்தனக் காப்பு அலங்காரத்தில் முருகன் காட்சியளித்தாா். தொடா்ந்து மாலை கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இரவு நடைபெற்ற சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →