முகப்பு
புதுக்கோட்டை

அன்னவாசல் ஒன்றியத்தில் கண் பரிசோதனை முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தில் திங்கள்கிழமை கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தில் திங்கள்கிழமை கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள திருநல்லூரில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் திங்கள்கிழமை தொடங்கி வைத்து செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் சிவிபி அறக்கட்டளை இணைந்து கண் பரிசோதனைக்கான ஒளிமயமான வாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், திருநல்லூா், ஈஸ்வரன்கோயில், கட்டக்குடி,கோத்திராப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ஒளிமயமான வாழ்வு முகாம் தொடக்கி வைத்து பாா்வையிடப்பட்டது. தினமும் மூன்று ஊராட்சிப் பகுதிகளில் இம் முகாம் நடத்தப்பட உள்ளது.

மேலும், மூக்கு கண்ணாடி பரிந்துரைக்கப்படுவோருக்கு சிவிபி அறக்கட்டளை மூலம் விலையில்லாமல் மூக்குக் கண்ணாடி வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.