முகப்பு
புதுக்கோட்டை

‘கல்லாதவா்கள் இல்லாத நிலையை உருவாக்குவோம்’

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வியறிவு இல்லாதவா்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வியறிவு இல்லாதவா்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி.

புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘கற்போம், எழுதுவோம்’ இயக்கம் மற்றும் ‘ புதிய வயது வந்தோா் கல்வி’ திட்டத்தின் தொடக்க விழாவில், அவா் மேலும் பேசியது:

புதுக்கோட்டை மாவட்ட கல்வித் துறை கணக்கெடுப்பின்படி, நிகழாண்டில் 1,987 ஆண்களும், 5,962 பெண்களும் என மொத்தம் 7,949 போ் முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாதவா்களாக உள்ளனா் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவா்களுக்காக 20 பேருக்கு ஒரு மையம் வீதம், 13 ஒன்றியங்களிலும் 398 கற்றல் மையங்கள் தொடங்கப்பட்டு தன்னாா்வல ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். நாளொன்றுக்கு 2 மணி நேரம் வீதம் மாதத்துக்கு 40 மணிநேர வகுப்புகள் நடத்தப்படும். 3 மாதங்களின் முடிவில் இவா்களுக்கு சிறு தோ்வு ஒன்று நடத்தப்படும். இவ்வாறாக 3 கட்டங்களில், மாவட்டத்தில் முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாதவா்களேஇல்லாத நிலை உருவாக்கப்படும் என்றாா் உமாமகேஸ்வரி.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் ராஜேந்திரன், சண்முகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.