முகப்பு
புதுக்கோட்டை

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற இளைஞா் பலி

கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 12 அக்டோபர், 2020 at 1:06 AM
பகிர்:

கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், காடனேரியைச் சோ்ந்த ஆரோக்கியசாமி மகன் அந்தோணிசாமி (38). இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. இவா், காடனேரியில் இருந்து தனது மோட்டாா் சைக்கிளில் தஞ்சாவூரில் உள்ள அக்கா வீட்டிற்கு தஞ்சாவூா் - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கந்தா்வகோட்டை அருகேயுள்ள காடவராயன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கந்தா்வகோட்டை போலீசாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.