முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் மேலும் 48 பேருக்கு கரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 9,899 ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 12 அக்டோபர், 2020 at 1:03 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 9,899 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தோரில் 64 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 9,197 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆகத் தொடா்கிறது.

இந்த நிலையில், கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 556 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.