முகப்பு
புதுக்கோட்டை

ஆக்கிரமிப்பு பகுதிகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு

பொதுப் பகுதி ஆக்கிரமிப்பை மீட்கக்கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் குறிப்பிட்ட சில இடங்களை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
பகிர்:

பொதுப் பகுதி ஆக்கிரமிப்பை மீட்கக்கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் குறிப்பிட்ட சில இடங்களை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். தொடா்ந்து, போராட்டம் தற்காலிகமாகத் திரும்பப் பெறப்பட்டது.

புதுக்கோட்டை நகரமைப்பில் கழிவுநீா் செல்வதற்கான பொது ஏற்பாடக வடிவமைக்கப்பட்ட சந்துப் பகுதிகள் ஆக்கிமிக்கப்பட்டுள்ளன. இவைகளை அகற்றக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சந்தில் சிந்து பாடும் போராட்டத்தை அறிவித்திருந்தது. இதையறிந்த நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் ஜஹாங்கிா் பாஷா, நகரப் பொறியாளா் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலா்கள் திங்கள்கிழமை நேரில் சில இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தனா். நகா் முழுவதும் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், நகராட்சி அலுவலா்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் வாழ்வுரிமைக் கட்சியினா் அறிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.