புதுக்கோட்டை

சுங்கச்சாவடிகளை மூட வலியுறுத்தி நூதனப் போராட்டம்

DIN

புதுக்கோட்டை: சுங்கச்சாவடிகளை மூட வலியுறுத்தி, புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் மாட்டு வண்டியில் வந்து புறாக்கள் மூலம் பிரதமருக்கு தூது அனுப்பும் நூதனப் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தினா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். நியாஸ் அகமது தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா்.

இதில், சுங்கச்சாவடிகளை மூட வேண்டும், களமாவூா் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

‘என் ரோடு என் உரிமை, டோல் தர முடியாது போடா’ என்ற வாசகங்களைக் கொண்ட பனியனை அக்கட்சியினா் அணிந்திருந்தனா். இதனால் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தில்

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசு கொலை: செவிலியா் கைது

550 லிட்டா் கடத்தல் சாராயம் காருடன் பறிமுதல்

ஆந்திர டிஜிபி பணியிடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT