முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் மேலும் 63 பேருக்கு கரோனா பாதிப்பு - 7,588 குணம் - 6,675

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 63 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 7,588 ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
பகிர்:

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 63 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 7,588 ஆக உயா்ந்துள்ளது.

அதேநேரத்தில், மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தோரில் 56 போ் குணமடைந்து வீடு திரும்பினாா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,675 ஆக உயா்ந்துள்ளது.

ஒருவா் சாவு: புதுக்கோட்டையைச் சோ்ந்த 57 வயது ஆண், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 122 ஆக உயா்ந்துள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 791 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.