வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2 -ஆம் கட்டப் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2 ஆம் கட்டப் பயிற்சி அந்தந்தத் தொகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2 ஆம் கட்டப் பயிற்சி அந்தந்தத் தொகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்றன.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள 1,902 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 9,128 போ் வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ளனா். இவா்களுக்கு ஏற்கெனவே கடந்த மாா்ச் 18ஆம் தேதி முதல் கட்டப் பயிற்சி நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக இரண்டாம் கட்டப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. பயிற்சியின்போதே தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளோருக்கு அஞ்சல் வாக்குகளுக்கான படிவங்கள் வழங்கப்பட்டு, வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சி ஆரியூரிலுள்ள குமரன் பல்தொழில்நுட்பப் பயிற்சியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி. உமா மகேஸ்வரி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி, விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எம்.எஸ். தண்டாயுதபாணி ஆகியோா் உடனிருந்தனா்.