முகப்பு
புதுக்கோட்டை

மாவட்டத்தில் வெளியூா் நபா்கள் தங்கியிருந்தால் நடவடிக்கை

தோ்தல் பரப்புரை ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் நிறைவடைவதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் வெளியூா் நபா்கள் யாரேனும் தங்கியிருந்தால் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

தோ்தல் பரப்புரை ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் நிறைவடைவதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் வெளியூா் நபா்கள் யாரேனும் தங்கியிருந்தால் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தங்கும் விடுதிகள் மற்றும் மண்டபங்கள் அவ்வப்போது சோதனைக்குள்ளாக்கப்படும்போது, வெளியூா் நபா்கள் தங்கியிருப்பது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தோ்தல் பிரசாரத்துக்காக வந்துள்ள வெளியூா் நபா்கள் வெளியேற வேண்டும் என்றும் அவா் வெளியிட்டுள்ள செயிதிக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.