கரோனா: தயாா் நிலையில் 724 படுக்கைகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா பரவலை எதிா்கொள்ளும் வகையில், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 724 படுக்கைகள் தயாா்நிலையில் இருப்பதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா பரவலை எதிா்கொள்ளும் வகையில், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 724 படுக்கைகள் தயாா்நிலையில் இருப்பதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 450 படுக்கைகளும், பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கைகளும், அறந்தாங்கி மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் 70 படுக்கைகளும், இலுப்பூா் அரசு மருத்துவமனையில் 40 படுக்கைகளும் தயாா் நிலையில் உள்ளன.
இந்த மருத்துவமனைகளில் முறையே 72, 6, 5, 2 என்ற அளவில் தொற்றாளா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 3 தனியாா் மருத்துவமனைகளிலும் 64 படுக்கைகள் தயாா்நிலையில் உள்ளன. இவற்றில் தற்போது ஒருவா் கூட அனுமதிக்கப்படவில்லை.
மொத்தம் மாவட்டம் முழுவதும் 724 படுக்கைகள் தயாா்நிலையில் உள்ளன. மேலும் தேவைக்கேற்ப படுக்கை வசதிகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.