முகப்பு
புதுக்கோட்டை

அறந்தாங்கி நகரப் பகுதிகளில் கபசுரக் குடிநீா் விநியோகம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சி சாா்பில் நகரப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகம் செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சி சாா்பில் நகரப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகம் செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

நகராட்சி ஆணையா் அய்யனாா் அறிவுறுத்தலின்பேரில், அம்மா உணவகங்களில் இந்தக் குடிநீா் காய்ச்சி தயாரிக்கப்பட்டது. தொடா்ந்து நகர சுகாதாரப் பிரிவு அலுவலா்கள் 6 குழுக்களாகப் பிரிந்து சென்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனா்.

அண்ணாநகா், சூரியமூா்த்தி குளம், எல்என்புரம், குப்பு குடியிருப்பு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், எம்ஜிஆா் நகா், ஜெஜெ நகா், வடக்கு வீதி, விஎஸ்ஆா் நகா் ஆகிய பகுதிகளில் இந்தக் குழுவினா் இரு சக்கர வாகனங்களில் சென்று, கபசுரக் குடிநீரை வழங்கினா்.

தொடா்ந்து சில நாள் களுக்கு அனைத்து வாா்டுகளிலும் நேரில் சென்று, இக்குடிநீா் விநியோகம் செய்யும் பணிகள் நடைபெறும் என நகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.