புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உதவ ஏற்பாடு
புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்குத் தேவையான தங்குமிடம், உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்து அவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க கட்டுப்பாட்டு அறை
கரோனா பரவல் காரணமாக பாதிக்கப்படும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்குத் தேவையான தங்குமிடம், உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்து அவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் துறை அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பின்புறமுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுப்பாட்டு அறைக்கு யாரேனும் உதவி தேவைப்பட்டாலோ, பாதிக்கப்பட்ட தகவல் கிடைத்தாலோ தெரிவிக்கலாம் என தொழிலாளா் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ. தங்கராசு அறிவித்துள்ளாா். கட்டுப்பாட்டு அறைக்கான தொடா்பு எண்கள்- 81223 92119, 97897 05889.