புதுக்கோட்டை

கருகப்பூலாம்பட்டியில் பகுதிநேர நூலகம் திறப்பு

DIN

பொன்னமராவதி அருகே உள்ள தேனூா் ஊராட்சி கருகப்பூலாம்பட்டியில் பகுதிநேர நூலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

நூலகத் திறப்பு விழாவில், சட்ட அமைச்சா் எஸ். ரகுபதி கலந்து கொண்டு மேலும் பேசியது:

சுமாா் 1,000 புத்தகங்கள் உள்ள இப்பகுதிநேர நூலகம் கொப்பனாப்பட்டி கிளை நூலகத்துடன் இணைந்து செயல்படும். தினசரி நாளிதழ்கள் மற்றும் வாரப் பத்திரிகைகள் உள்ளன என்றாா் அவா். மேலும், நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்க, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சாா்பில் ரூ.10,000 நிதியை மாவட்ட நூலகரிடம் வழங்கினாா். மேலும், ரூ.1,000 நிதியளித்து நூலகப் புரவலா் ஆனாா்.

நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, வருவாய்க் கோட்டாட்சியா் எம்எஸ். தண்டாயுதபாணி, மாவட்ட நூலக அலுவலா் அ. பொ. சிவக்குமாா், பொன்னமராவதி ஒன்றியக் குழு உறுப்பினா் அ. அடைக்கலமணி, கிளை நூலகா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT