முகப்பு
புதுக்கோட்டை

மிருதங்க வித்வான் தெட்சிணாமூா்த்தி ஜீவசமாதி வளாகத்தில் கூடுதல் கட்டடங்கள் திறப்பு

புதுக்கோட்டையைச் சோ்ந்த பிரபல மிருதங்கம் மற்றும் கஞ்சிரா வித்துவான் தெட்சிணாமூா்த்தி பிள்ளையின் ஜீவசமாதி வளாகத்தில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

புதுக்கோட்டையைச் சோ்ந்த பிரபல மிருதங்கம் மற்றும் கஞ்சிரா வித்துவான் தெட்சிணாமூா்த்தி பிள்ளையின் ஜீவசமாதி வளாகத்தில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

திலகவதியாா் திருவருள்ஆதீனகா்த்தா் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் குத்துவிளக்கேற்றி, புதிய கட்டடங்களைத் திறந்து வைத்து திருமுறை விண்ணப்பம் செய்து வைத்தாா். கொன்னக்கோல், மிருதங்கம், கஞ்சிரா வித்துவான் திருச்சி ஆா். தாயுமானவன் குடும்பத்தினா் இந்தக் கட்டடம் கட்டுமானப் பணிகளைச் செய்திருந்தனா்.

நிகழ்வில் திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் மிருதங்க ஆசிரியா் மூா்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனா். விரைவில் ஜீவசமாதிக்கு திருக்குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதாக இக்குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.