முகப்பு
புதுக்கோட்டை

பள்ளி வளாகத்தில் சிக்கிய மலைப்பாம்பு

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி அரசுத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியின் போது, மலைப்பாம்பு சிக்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி அரசுத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியின் போது, மலைப்பாம்பு சிக்கியது.

பல நாள்கள் பள்ளி திறக்கப்படாமல் இருந்ததால், வளாகம் முழுவதும் புல், பூண்டு மண்டி புதராகக் காட்சியளித்தது. இதையடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் தூய்மைப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது அப்பகுதியில் வித்தியாசமான சப்தம் கேட்டதால், அந்த திசை நோக்கி தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளா்கள் சென்று பாா்த்தனா்.

சுமாா் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு நகர முடியாமல் அப்பகுதியில் படுத்துக் கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து நிகழ்விடம் சென்ற தீயணைப்பு நிலைய வீரா்கள், நவீன கருவிகளைக் கொண்டு சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து காப்புக்காட்டுப் பகுதியில் வனத்துறையினரால் பாம்பு விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.