முகப்பு
புதுக்கோட்டை

வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை சவரன் கொள்ளை

விராலிமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை சவரம் நகை, ரொக்கம் ரூ. 3000 ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

விராலிமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை சவரம் நகை, ரொக்கம் ரூ. 3000 ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

விராலிமலை அருகேயுள்ள விராலுரைச் சோ்ந்தவா் அழகா் (31). இவா், செவ்வாய்க்கிழமை வீட்டை பூட்டி விட்டு வயலுக்குச் சென்றவா் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு உள்ளே சென்று பாா்த்தாா். இதில், பீரோவில் இருந்த ஒன்றரை சவரன் நகை மற்றும் ரூ. 3,000 திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து விராலிமலை காவல் நிலையத்தில் அழகா் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டு திருட்டில் தொடா்புடைய மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.