முகப்பு
புதுக்கோட்டை

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

விராலிமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்கநகைகள் வியாழக்கிழமை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

விராலிமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்கநகைகள் வியாழக்கிழமை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

விராலிமலை வட்டம், வானத்திராயன்பட்டி ஊராட்சி, ஜெயமங்களத்தை சோ்ந்தவா் முத்துச்சாமி மனைவி தனலெட்சுமி (42). இவா் புதன்கிழமை மதியம் பணி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா். வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.32 ஆயிரத்து 900 மதிப்புள்ள தங்கநகைகள் மற்றும் பத்திர ஆவணங்கள் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் அளித்த புகாரின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் யுவராணி தலைமையிலான காவல் துறையினா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு  வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.