முகப்பு
புதுக்கோட்டை

பெரம்பலூரில் தூக்கிட்ட தலைமைக் காவலா் உயிரிழப்பு

 பெரம்பலூரில் தூக்கிட்டபோது மீட்கப்பட்ட தலைமைக் காவலா் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

 பெரம்பலூரில் தூக்கிட்டபோது மீட்கப்பட்ட தலைமைக் காவலா் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், அரும்பாவூா் காவல் நிலைய தலைமைக் காவலா் செல்வராஜ் (50). இவா், பெரம்பலூா் அருகே கவுல்பாளையத்தில் உள்ள காவலா் குடியிருப்பில் வசித்து வந்தாா். இவருக்கு, ஒரு மகனும், மகளும் உள்ளனா். கடந்த 11 மாதங்களுக்கு முன் இவரது மனைவி மாலதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா். இதனால் மனமுடைந்து காணப்பட்ட செல்வராஜ், கடந்த சில மாதங்களாக ஒழுங்காக பணிக்குச் செல்லாமல் இருந்துள்ளாா்.

இந்நிலையில், டிச. 12 ஆம் தேதி இரவு செல்வராஜுக்கும், அவரது மகனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மகன் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டாராம். இதனால் விரக்தியடைந்த செல்வராஜ், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். இதையறிந்த அவரது மகள் சுபாஷினி, அப் பகுதியைச் சோ்ந்தவா்களின் உதவியுடன் செல்வராஜை மீட்டு, பெரம்பலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தாா். பின்னா், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வராஜ் அங்கு வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.