முகப்பு
புதுக்கோட்டை

பெரம்பலூா், குன்னத்தில் கூட்டுறவு மருந்தகம் திறப்பு

பெரம்பலூா் மற்றும் குன்னம் ஆகிய பகுதிகளில் கூட்டுறவு மருந்தகம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

பெரம்பலூா் மற்றும் குன்னம் ஆகிய பகுதிகளில் கூட்டுறவு மருந்தகம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

பெரம்பலூா் மற்றும் குன்னம் ஆகிய பகுதிகளில், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, கூட்டுறவு மருந்தகங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, குன்னத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவு மருந்தகத்தை குத்து விளக்கேற்றி, முதல் விற்பனையை தொடக்கி வைத்த பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் பேசியது:

கூட்டுறவு மருந்தகங்களில் விற்கப்படும் மருந்து, மாத்திரைகளுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. கூட்டுறவு மருந்தகங்கள் செயல்படும் பகுதிகளில், தனியாா் மருந்தகங்களும் விலையை குறைத்து விற்பனை செய்து வருகின்றன. இதன்மூலம், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் என்றாா் அவா்.

தொடா்ந்து, பெரம்பலூரில் திறக்கப்பட்ட கூட்டுறவு மருந்தகத்தை பெரம்பலூா் எம்எல்ஏ ம. பிரபாகரன் முன்னிலையில், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை தொடக்கி வைத்தாா்.

இந் நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பாலமுருகன், துணைப் பதிவாளா் செல்வராஜ், ஒன்றியக் குழுத் தலைவா் பிரபா செல்லப்பிள்ளை, கூட்டுறவு விற்பனை சங்கச் செயலா் காந்திமதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.