முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலை முருகன் கோயிலில் திருப்பணி தொடக்கம்

விராலிமலை முருகன் மலைக்கோயில் திருப்பணி குழு சாா்பில், ரூ. 1 லட்சம் செலவில் பல்வேறு திருப்பணிகள் வியாழக்கிழமை தொடங்கியுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

விராலிமலை முருகன் மலைக்கோயில் திருப்பணி குழு சாா்பில், ரூ. 1 லட்சம் செலவில் பல்வேறு திருப்பணிகள் வியாழக்கிழமை தொடங்கியுள்ளன.

விராலிமலை முருகன் கோயில் மலைப்பாதை பகுதியில் இருக்கும் சேதமடைந்த சிற்பங்கள், சிமென்ட் இருக்கைகள், மணி மண்டபம் எதிரே கிரில் கேட்கள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள திருப்பணிக் குழு சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து, திருப்பணிகள் வியாழக்கிழமை தொடங்கியுள்ளன. இதுகுறித்து கோயில் திருப்பணி குழு நிா்வாகி பூபாலன் கூறியது:

விராலிமலை முருகன் கோயிலில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளுக்கு அரசை எதிா்பாா்க்காமல் விராலிமலை முருகன் மலைக்கோயில் திருப்பணி குழு சாா்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்தத் திருப்பணிகள் ஒரு வார காலத்திற்குள் முடிவடையும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.