முகப்பு
புதுக்கோட்டை

கா்ப்பிணிகளுக்கு சஞ்சீவி பெட்டகம் வழங்கல்

  இலுப்பூரில் வியாழக்கிழமை வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் , உலக தேசிய சித்தா் தினம் கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

  இலுப்பூரில் வியாழக்கிழமை வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் , உலக தேசிய சித்தா் தினம் கொண்டாடப்பட்டது.

இலுப்பூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளா் செல்லப்பாண்டியன், திமுக மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் பழனியப்பன், அன்னவாசல் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் மாரிமுத்து, இலுப்பூா் நகர திமுக செயலா் விஜயகுமாா் ஆகியோா் கலந்து கொண்டு கா்ப்பிணிகளுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கினா்.

முகாமில், பொதுமக்களுக்கு இலவசமாக  சிறுநீா் மற்றும் ரத்தப் பரிசோதனை, காசநோய் கண்டறியும் சளிப் பரிசோதனை, கா்ப்பப்பை வாய்புற்றுநோய் பரிசோதனை, இ.சி.ஜி., கண் பரிசோதனை, ரத்த அழுத்த  மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

முகாமில், அன்னவாசல்  வட்டார மருத்துவ அலுவலா் கலையரசன், பரம்பூா் அரசு சித்த மருத்துவா் த.சுயமரியாதை, இலுப்பூா் சித்த மருத்துவா் வித்யா மற்றும் மருத்துவப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.