முகப்பு
புதுக்கோட்டை

தனியாா் பேருந்து மோதி பைக்கில் சென்றவா் பலி

விராலிமலை அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

விராலிமலை அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

விராலிமலை அருகே உள்ள மலைக்குடிப்பட்டியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மகன் சிவசங்கா் (25). இவா், திங்கள்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் பகவான்பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியாா் பேருந்து மோதியது.

இதில், பலத்த காயமடைந்த சிவசங்கரை அக்கம்பக்கத்தினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில் அங்கு சிவசங்கா் உயிரிழந்தாா். விராலிமலை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.