சாதி வெறி வன்கொடுமையில் ஈடுபடுவோா் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுக்கோட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் செப. பாவாணன் தலைமை வகித்தாா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலா் உஞ்சை அரசன், மாநிலத் துணைச் செயலா் தெ. கலைமுரசு ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.