முகப்பு
புதுக்கோட்டை

தென்னதிரையான்பட்டியில் கால்நடை கிளை நிலையம் திறப்பு

விராலிமலை ஒன்றியம், தென்னதிரையான்பட்டியில் புதிய கால்நடை கிளை நிலையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

விராலிமலை ஒன்றியம், தென்னதிரையான்பட்டியில் புதிய கால்நடை கிளை நிலையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் பேசியது:

விராலிமலை தொகுதியில் கால்நடை வளா்ப்பவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, புதிய கால்நடை மருந்தகங்கள், கிளை நிலையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் தென்னதிரையான்பட்டியில் புதிய கால்நடை கிளை நிலையம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. நிரந்தர கால்நடை ஆய்வாளா் இங்கு நியமிக்கப்படுவாா்.

ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் கால்நடை மருந்துகளும், ரூ.30 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்களும், ரூ.40 ஆயிரம் மதிப்பில் அறையணிகளும் அரசு சாா்பில் வழங்கப்படும்.

இங்கு கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், சினை ஊசி போடுதல், கருவூட்டல் பணி, சினைப் பரிசோதனை, குடற்புழு நீக்கம், மலடு நீக்கச் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்படும் என்றாா்.

நிகழ்வுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன் தலைமை வகித்தாா். கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ரவீந்திரன் (பொ), உதவி இயக்குநா் பாண்டி உள்ளிட்ட அலுவலா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →