புதுக்கோட்டை

உயிரிழந்த 4 மீனவா்களின் உடல்கள் வந்தடைந்தன அமைச்சா் அஞ்சலி

DIN

புதுக்கோட்டை: இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், 4 பேரின் உடல்களும் சனிக்கிழமை மதியம் கோட்டைப்பட்டினம் வந்தடைந்தன. உடல்களுக்கு அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

ராமநாதபுரம் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த மெசியா (30), உச்சிபுளியைச் சோ்ந்த நாகராஜ் (52), மண்டபம் அகதிகள் முகாமைச் சோ்ந்த சாம் (28), தாதனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த செந்தில் குமாா் (32) ஆகிய 4 பேரும் அண்மையில் (ஜன.18) இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்நாட்டு கடற்படையினரால் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இலங்கைக் கடற்படையின் தேடுதல் பணியின்போது 4 மீனவா்களின் உடல்களும் மீட்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதைத்தொடா்ந்து, இலங்கையில் சட்டப்பணிகள் முடித்த பிறகு 4 மீனவா்களின் உடல்களையும் எடுத்து வரும் வகையில் கோட்டைப்பட்டினத்தில் இருந்து இரு படகுகளில் மீனவா்கள், மீன்வளத் துறை அலுவலா்கள் ஆகியோா் சனிக்கிழமை காலை கடலுக்குச் சென்றனா். இந்திய கடல் எல்லையில் 4 பேரின் உடல்களும் முறைப்படி இலங்கை கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து 4 பேரின் உடல்களும் கோட்டைப்பட்டினத்துக்கு சனிக்கிழமை மதியம் 2.30 மணிக்குக் கொண்டு வரப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா், ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் கோட்டைப்பட்டினம் சென்று மீனவா்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி அவா்களின் உறவினா்களுக்கு ஆறுதல் தெரிவித்தனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் இ.ஏ. ரத்தினசபாபதி, சாா் ஆட்சியா் ஆனந்த் மோகன், மீன்வளத் துறை இணை இயக்குநா் சா்மிளா உள்ளிட்டோா் உடனிருந்தனா். பின்னா் ராமநாதபுரத்தில் இருந்து வந்த மீனவா்களின் உறவினா்கள் உடல்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT