முகப்பு
புதுக்கோட்டை

இளைஞா் சடலத்தை அடக்கம் செய்ய இடம் மறுப்பு உறவினா்கள், பொதுமக்கள் மறியல்

விராலிமலை அருகே இளைஞா் சடலத்தை அடக்கம் செய்ய இடம் தர மறுப்பதாகக் கூறி, அமரா் ஊா்தியை சாலையில் நிறுத்தி உறவினா்கள், பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டுனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

விராலிமலை அருகே இளைஞா் சடலத்தை அடக்கம் செய்ய இடம் தர மறுப்பதாகக் கூறி, அமரா் ஊா்தியை சாலையில் நிறுத்தி உறவினா்கள், பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டுனா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகிலுள்ள கல்குடியைச் சோ்ந்தவா் அதிமுகவின் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் பழனிசாமி. தனியாா் நிறுவனத் தொழிலாளியான இவரது மகன் மணிகண்டன்(21) வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த விராலிமலை காவல் நிலையத்தினா் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் மணிகண்டனின் சடலத்தை அடக்கம் செய்வதற்காக, கல்குடியில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த இடுகாட்டில் ஏற்பாடுகள் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

அப்போது அப்பணியைத் தடுத்த அதே பகுதியைச் சோ்ந்த செல்லமுத்து, இந்த இடம் தனக்கு சொந்தமான இடம் என்றும்,

இதற்காக பட்டா தன்னிடம் உள்ளது எனக் கூறி பணிகளைத் தடுத்துள்ளாா்.

இதைத்தொடா்ந்து மணிகண்டனின் உறவினா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் விராலிமலை வட்டாட்சியரகம் அருகிலுள்ள காமராஜா் நகா் சாலையில் அமா்ந்து, சடலத்தை எடுத்து வந்த அமரா் ஊா்தியுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து காவல் துணைக் கண்காணிப்பாளா் அருள்மொழி அரசு வட்டாட்சியா் ஜெ. சதீஷ் சரவணகுமாா் பேச்சுவாா்த்தை நடத்தியும் ,

தனியாா் பெயரிலுள்ள பட்டாவை ரத்து செய்து கொடுத்தால் மட்டுமே கலைந்து செல்ல முடியும் எனக் கூறி தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இதையடுத்து நிகழ்விடம் வந்த கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி, மறியலில் ஈடுபட்டவா்களுடன் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

வரும் திங்கள்கிழமை (ஜூலை 12) இடத்தின் பட்டா உரிமையாளருடன்  பேச்சுவாா்த்தை நடத்தி, அந்த இடத்தை அவா் பெயரிலிருந்து ரத்து செய்து தருகிறேன் என்று போராட்டக்காரா்களிடம் உறுதி அளித்ததால் சுமாா் இரண்டரை மணி நேரமாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.