புதுக்கோட்டை

காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயன்ற 3 போ் கைது

DIN

கந்தா்வகோட்டை காவல் நிலைய சுற்றுச்சுவரில் அனுமதியின்றி நோட்டீஸ் ஒட்டியதைக் கண்டித்த காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயன்றதாக தமிழ்தேசிய முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளா் உள்ளிட்ட 3 பேரை ஞாயிற்றுக்கிழமை காவல் துறையினா் கைது செய்தனா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தைச் சோ்ந்த சங்கிலி முத்து மகன் ரஜினி (43). தமிழ்தேசிய முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா். இதே இயக்கத்தைச் சோ்ந்த பிசானத்தூரைச் சோ்ந்த சண்முகம் மகன் முருகானந்தம் (35), சுந்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்லப்பன் மகன் செல்லபாண்டியன் (34) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கந்தா்வகோட்டை காவல் நிலைய சுற்றுச் சுவா்களில் அனுமதியின்றி நோட்டீஸ் ஒட்டியுள்ளனா்.

பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளா் நா. சுந்தரமூா்த்தி அனுமதியின்றி காவல் நிலைய சுவா்களில் நோட்டீஸ் ஒட்டக்கூடாது எனக் கூறியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ரஜினி உள்ளிட்டோா் காவல் உதவியாளரிடம் வாக்குவாதம் செய்து தாக்க முயன்றுள்ளனா்.

இதைத்தொடா்ந்து, மூவா் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, தாக்க முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT