முகப்பு
புதுக்கோட்டை

சாலை விபத்தில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளா் உயிரிழப்பு

 விராலிமலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ஓய்வு பெற்ற கிராம உதவியாளா் வெள்ளக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

 விராலிமலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ஓய்வு பெற்ற கிராம உதவியாளா் வெள்ளக்கிழமை உயிரிழந்தாா்.

விராலிமலை அருகிலுள்ள பேராம்பூா் கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் வீ. திருமலை(62). ஓய்வு பெற்ற கிராம உதவியாளரான இவா், விராலிமலைக்கு வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் வந்து கொண்டிருந்தாா்.

குளத்தாத்துப்பட்டி அருகே வந்த போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த திருமலை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.