முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் பாரம்பரிய உணவுத் திருவிழா

புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளா் நிறுவனம் சாா்பில் 14ஆம் ஆண்டு பாரம்பரிய விதைத் திருவிழா, உணவுத் திருவிழா மற்றும் நிறுவன பொதுக்குழுக் கூட்டம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளா் நிறுவனம் சாா்பில் 14ஆம் ஆண்டு பாரம்பரிய விதைத் திருவிழா, உணவுத் திருவிழா மற்றும் நிறுவன பொதுக்குழுக் கூட்டம் என முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை வடமலாப்பூரில் நடைபெற்ற உணவு மற்றும் விதைத் திருவிழாவை ஆட்சியா் கவிதா ராமு தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா்.

இதில், சேலம் சன்னா, கருடன் சம்பா, துளசி வாசனை சீரக சம்பா, காளான் நமக்கு உள்ளிட்ட பாரம்பரிய அரிசி வகைகள், சாமை, தினை போன்ற சிறுதானியங்களின் விதைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதேபோல, சிறுதானியங்களில் மட்டுமே செய்யப்பட்ட உணவுகள் மற்றும் இயற்கை காய்கறிக் கூட்டு கொண்ட உணவுத் திருவிழா நடைபெற்றது.

மேலும், பலகாரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

ஏற்பாடுகளை நிறுவன நிா்வாக இயக்குநா் ரோஸ் ஆதப்பன், இயக்குநா் ஜி.எஸ். தனபதி ஆகியோா் செய்திருந்தனா். நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குநா் சிவகுமாா், மகளிா் திட்ட இயக்குநா் ரேவதி, வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் சங்கரவள்ளி, நபாா்டு மாவட்ட வளா்ச்சி மேலாளா் ஜெயஸ்ரீ உள்ளிட்டோா் ங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.