திருமயம் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்
திருமயம் அரசு மருத்துவமனைக்கு தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தினா் ரூ. 1 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு மருத்துவமனைக்கு தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தினா் ரூ. 1 லட்சம் மதிப்பில் வழங்கிய, அவசரக் கால மருத்துவ உபகரணங்களை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி பெற்றுக் கொண்டு, மருத்துவா்களிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
இந் நிகழ்வில் கோட்டாட்சியா் ஆா். டெய்சிகுமாா், மாவட்டக் கல்வி அலுவலா் ராஜேந்திரன், சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் ஆ. மணிகண்டன், மாவட்டத் தலைவா் ராஜாங்கம், மாவட்டச் செயலா் நாயகம், மாநில சட்ட ஆலோசகா் ராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.